Malliyam & Aanaimelagram one of the beautiful & peaceful village place, this site useful for malliyam city guys and Everyone,
Like & share
Saturday, 7 January 2012
கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு
இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி
பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி
பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர்
காய்வாய்? இவனிடம் பதிலில்லை.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும்,
1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள்
இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில்
சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம்
நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.
அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து
ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90
களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை வேலைகளில்
ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக
உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.
Subscribe to:
Posts (Atom)