Like & share

Tuesday, 20 August 2013

விமான பயணிகள் கொண்டு வரும் "டிவி'க்கு சுங்க வரி!



விமான பயணிகள் கொண்டு வரும் "டிவி'க்கு சுங்க வரி!

இந்தியாவுக்கு விமானப் பயணிகள் கொண்டு வரும் "டிவி' க்கு அளிக்கப்பட்டு வந்த சுங்கவரி 

சலுகையை, மத்திய அரசு ரத்துசெய்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் விமானப் பயணிகள் தலா ஒரு எல்.சி.டி.
அல்லது எல்.இ.டி., "டிவி'யை சுங்கவரியின்றி இந்தியாவிற்கு கொண்டு வர சலுகை அளிக்கப்படுகிறது. இச்சலுகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடப்புகணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு, அத்தியாவசியமற்ற பொருட்கள் மீது இறக்குமதி வரி விதிக்க முடிவு செய்து உள்ளது. இதன்படி, வரும் 26ம் தேதி முதல் இந்தியா வரும் விமானப் பயணிகள், கொண்டு வரும் "டிவி' க்கு சுங்கவரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.