Like & share

Tuesday, 20 August 2013

விமான பயணிகள் கொண்டு வரும் "டிவி'க்கு சுங்க வரி!



விமான பயணிகள் கொண்டு வரும் "டிவி'க்கு சுங்க வரி!

இந்தியாவுக்கு விமானப் பயணிகள் கொண்டு வரும் "டிவி' க்கு அளிக்கப்பட்டு வந்த சுங்கவரி 

சலுகையை, மத்திய அரசு ரத்துசெய்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் விமானப் பயணிகள் தலா ஒரு எல்.சி.டி.
அல்லது எல்.இ.டி., "டிவி'யை சுங்கவரியின்றி இந்தியாவிற்கு கொண்டு வர சலுகை அளிக்கப்படுகிறது. இச்சலுகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடப்புகணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு, அத்தியாவசியமற்ற பொருட்கள் மீது இறக்குமதி வரி விதிக்க முடிவு செய்து உள்ளது. இதன்படி, வரும் 26ம் தேதி முதல் இந்தியா வரும் விமானப் பயணிகள், கொண்டு வரும் "டிவி' க்கு சுங்கவரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



Tuesday, 16 July 2013

கணவரை மகிழ்விப்பது எப்படி?

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் பெண்ணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை)

மனைவியின் அழகிய வரவேற்பு

பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.
முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.
உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.
சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி ஏதேனும் இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும்வரை பிற்படுத்தி வையுங்கள்.
அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).
கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை, சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).


இனிய குரலும் தேவையான கனிவும்

உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாகப் பேசுங்கள். கணவரைத் தவிர வேறு எந்த ஆணிடமும் குறிப்பாக மஹரம் அல்லாத ஆண்களுக்கு முன்னால் குழைந்து பேசக்கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம்.
உங்கள் கணவரிடத்தில் உம்!! இல்லை!!என்று அரைகுறையாகப் பேசி, அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்