Like & share

Monday, 30 September 2024

ஆனைமேலகரம்*. .மல்லியம்.விவசாய நண்பர்களுக்கு

*ஆனைமேலகரம்*.     .மல்லியம்.விவசாய நண்பர்களுக்கு வணக்கம். நாளை (01:10:24).காலை 11 மணியளவில் மல்லியம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் வேளாண் துறை சார்பில் பயிர்களில் ஏற்படும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி என்று வேளாண் துறை அதிகாரிகள் மூலம் வகுப்பு நடைபெற உள்ளது எனவே அனைத்து விவசாயிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி.

Saturday, 24 August 2024

Please don't put your mobile when you sleep near place

Please don't put your mobile when you sleep near place and turn off mobile data, Bluetooth and WiFi because of reduced radiation 

தயவு செய்து நீங்கள் அருகில் உறங்கும் போது உங்கள் மொபைலை வைக்க வேண்டாம் மற்றும் கதிர்வீச்சு குறைவதால் மொபைல் டேட்டா, புளூடூத் மற்றும் வைஃபை ஆகியவற்றை அணைக்க வேண்டும்
https://www.facebook.com/Malliyam.Aanaimelagram/videos/503388242314167/

Monday, 6 November 2023

மாற்றுத்திறனாளி புதிய அடையாள அட்டை, இரயில் பாஸ்/ பாஸ்,பாஸ் பெறுவதற்கான மருத்துவ முகாம்

வணக்கம் நாளை 07/11/2023 காலை 10 மணிக்கு மயிலாடுதுறை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி புதிய அடையாள அட்டை, இரயில் பாஸ்/ பாஸ்,பாஸ் பெறுவதற்கான மருத்துவ முகாம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடைபெறும் 

குறிப்பு :
 4 போட்டோ, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் எடுத்து வரவும்

Wednesday, 21 April 2021

ஏசி காரில் செல்பவர்கள் கவனத்திற்கு...!!!

ஏசி காரில் செல்பவர்கள் கவனத்திற்கு...!!!

விழிப்புணர்வு பதிவு..!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

* வாகன குளிரூட்டி AC யுடன் தொடர்புடைய கீழ்க்காட்டப்பட்ட ஒரு பட்டன் காணப்படும். இது ஆன் செய்துள்ள போது வாகனத்தின் உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும்.

* இதை ஆஃப் செய்துள்ள போது வெளியில் இருந்து காற்றை எடுத்து குளிரூட்டும்.

* நாம் வாகனம் செலுத்தும் போது வெளியில் இருந்து காற்றை எடுப்பதால் குளிரூட்டுவது சற்று குறைவாக இருப்பதாலும் வெளியில் இருந்து வேறுவித வாசனைகள் உள்ளே வருவதாலும் அநேகமாக எல்லோரும் காருக்குள்ளேயே இருக்கும் காற்றை குளிரூட்டும்(Internal cooling) பட்டனை ஆன் நிலையிலேயே வைத்திருப்போம்.

* ஆனால் நீண்டதூரம் பயணம் செய்யும் போதோ அல்லது நிறைய நபர்கள் பயணம் செய்யும் போதோ உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும் சந்தர்ப்பத்தில் உள்ளே ஆக்ஸிஜன் அளவு குறைந்து நம் சுவாசம் காரணமாக கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்து காணப்படும். 

*இந்த வேளையில் வாகனம் செலுத்துபவருக்கு அதிக கொட்டாவி நித்திரை மயக்கம் உடல் சோர்வு என்பன ஏற்படும்...

* இந்த வேளையிலேயே நாம் வாகனத்தை விட்டு வெளியில் வந்து கால் கையை அசைப்பதாலோ அல்லது முகம் கழுவுவதாலோ அல்லது ஒரு கடைக்கு சென்று ஒரு தேநீர் அருந்துவதாலோ பழைய நிலைக்கு வருவது போல உணர்வோம்....

* அது உண்மையில் வெளியில் வந்து நல்ல ஆக்ஸிஜனை சுவாசிப்பதால் உடல் பழைய நிலைக்கு திரும்புகிறது.....

* இதேவேளை வாகனம் செலுத்தும் போது அதிக கொட்டாவி சோர்வு நித்திரை மயக்கம் வந்தால் அடிக்கடி கீழுள்ள பட்டனை ஆஃப் நிலைக்கு கொண்டு வந்து, வெளியில் உள்ள காற்று உள்ளே வர வாய்ப்பளித்தால் வெளியில் உள்ள காற்றில் இருந்து ஆக்ஸிஜன் உள்ளே வருவதால் கொட்டாவி குறைவதை உணர்வீர்கள்.

*  தோலை தூர பிரயாணம் செய்பவர்கள் நகர்ப்புற பகுதிகளில் இடையிடையே
(ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை ) கீழுள்ள பட்டனை ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆஃப் செய்து வெளியில் உள்ள காற்றை உள்ளே எடுத்து குளிரூட்டுவதால் நித்திரை மயக்கம் வருவதை ஓரளவு தடுக்கலாம் நாமும் உடல் சோர்வு இன்றியும் பயணிக்கலாம்....!!!!

* வாகன ஓட்டிகள் அறிந்திருக்க வேண்டிய விடயம் இதுவே..!!

Wednesday, 3 March 2021

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முறையை ரத்து செய்துவிட்டு மீண்டும் வாக்குப்பதிவு சீட்டினை பயன்படுத்தும் முறையை கேட்டு தொடங்கப்பட்ட


வருகின்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முறையை ரத்து செய்துவிட்டு மீண்டும் வாக்குப்பதிவு சீட்டினை பயன்படுத்தும் முறையை கேட்டு தொடங்கப்பட்ட இணைய தளத்தில் சுமார் லட்சக்கணக்கான பேர் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

www.ban-evm.site

என்ற இணையதளத்தின் மூலமாக உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை பதிவு செய்து மின்னணு கையொப்பமிட்டு தங்கள் கருத்தினை பதிவு செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
மேலும் இச்செய்தியினை உங்களது நண்பர்கள் உறவினர்கள் ஆகிய அனைவருக்கும் அனுப்பி வைத்து அவர்களது கருத்துக்களையும் பதிவு செய்ய உதவும் படியாக கேட்டுக்கொள்கிறோம்.

விரைவில் மாற்றத்தை கொண்டு வருவோம்.