Like & share

Wednesday, 28 December 2016

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நிலை....

அவனுக்கு என்னப்பா வெளிநாட்டில் வேலை கை நிறைய காசு, வசதியா இருக்கான் என்று சொல்கிறோம் ஆனால் சமீப காலமாக 45 வயதுக்கு உட்பட்ட, பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் வெளிநாடுகளில் மாரடைப்பால், மூளைசாவால், வலிப்பால் திடீர் என இறக்கிறார்கள் என்ற செய்தி என்ன சொல்லவருகிறது...

1.கிடைத்த உணவை சாப்பிட்டு விட்டு வேலை வேலை என ஓட வேண்டும், அப்போது தான் பன்னாட்டு மனிதர்கள் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் நம் வேலையை  தக்க வைக்க முடியும்.ஆக உழைத்த நேரம் போக கிடைத்த நேரத்தில் உண்டு, உறங்கிக்கொள்ள வேண்டும்

2.வேலை வேலை என ஓடி களைத்து போவதால் உடற்பயிற்சி என்ற ஒன்றை பெரும்பாலானோர் நினைத்து பார்க்க கூட நேரமில்லை.

3.பெரும்பாலோருக்கு டீ, சிகரெட், பெனடால் மாத்திரை என வாழ்க்கை அமைந்து இருக்கிறது.

4.வேலை பார்க்கும் இடங்களில் வேலைப்பளு,போட்டி, பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம் இவைகளை வெல்ல வேண்டும் எனும் போது மனஅழுத்தம் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்.

5.இதற்கிடையில் நாட்டில் குடும்பத்தில், உறவில் ஏற்படும் பிரச்சனைகளையும் போன் மூலமாக தீர்க்க வேண்டும்.

6.இருக்கும் வேலையை தக்க வைத்தால் தான்,அக்கா தங்கைகளின் கல்யாணம், தம்பிகளின் படிப்பு, புதிய வீட்டு கனவு என எல்லாவற்றையும் நிறைவேற்ற முடியும், தனது மனைவி குழந்தைகளின் எதிர்காலத்தையும் பார்க்க முடியும் என்ற எண்ணமும் பயமும்.

# ஆக உழைத்து உழைத்து, கவலையில், விரக்தியில், மனஅழுத்ததில், வாழ்க்கை போராட்டத்தில், வாழ்க்கை பயத்தில் வாழ்பவன் ஆரோக்கியம் எப்படி இருக்கும்... ?

# இப்பொழுதாவது புரிகிறதா, புலிவால் என தெரியாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் கஷ்ட்டப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நிலை....

No comments:

Post a Comment